Wednesday, 3 November 2010

மழலைச் சொல் இருபத்தி நாலு மணி நேரத்தில்

மழலைச் சொல் இருபத்தி நாலு மணி நேரத்தில்

ஒன்பது மணி நேரம் உறங்கி விட்டேன்
ஒரு மணி நேரம் கைபேசியில் பேசிவிட்டேன்

இரண்டு மணிநேரம் மாநகர பேருந்தில் இல்லாத இடத்தில நின்று பயணித்து விட்டேன்

எடுத்த பசிக்காக வேளைஒன்றுக்கு
இருபது நிமிடங்கள் என் சாப்பாட்டோடு காலத்தையும் விழுங்கி விட்டேன்

அலுவலக வேலையில் அரைமனதாய்
ஆறு மணி நேரத்தையும் ஓட்டிவிட்டேன்

பல் விளக்கவும் குளிக்கவும் பதினைந்து நிமிடம் என்றாலும்
பகிர்ந்து கொள்ளும் நிலையில் குடித்தனம் என்பதால்
பாழாக்கி கொண்டேன் வரிசையில் மூன்று பதினைந்து நிமிடங்களை மேலும்

மளிகை கடைக்கு செல்லவும்
மற்ற பொருளை வாங்கவும் ஒரு மணி நேரத்தை செலவழித்துவிட்டேன்
மனைவிக்கு ஒத்தாசை செய்கிறேன் என்று தண்ணீர் பிடித்து,
தரையினை துடைத்து குப்பையாக்கிவிட்டேன்

அழுவதும், அவிழ்பதுமான பெண்களை அரைமனதோடு
பார்த்து அழுக்காக்கி விட்டேன் அரைமணிநேரத்தை தொலைகாட்சி பெட்டியில்

மூன்று நாளைக்கு முந்தி இறந்தவரின் பிள்ளைக்கு
முக்கால் மணி நேரமாய் இணையவழி உரையாடலில்
முடிந்தால் கருமாதிக்கு வருவதாய் சாவுக்கு வராத வருத்தத்தை சற்று கூட்டி மெழுகி கூறினேன்

கால் மணி நேரத்திற்கு முந்தி நான்
காலையில் என் பிள்ளை கொடுத்த ஈர முத்தத்தை மறந்து போனதையும்
செம்மொழி என்றால் என்னவென்று
சிவப்பு நிறத்தில் பேனாவும்
சில இனிப்புகளும் வாங்கி வா என்பதையும்
சிந்திக்கிறேன் இது வரையில் நான் வாழ்வதே வீண் என்று..............

No comments:

Post a Comment