Thursday, 2 December 2010

குறை பிரசவமு‌ம் குழ‌ந்தை பா‌தி‌ப்பு‌ம்..........

எல்லோருக்கும் இனிமையான பிரசவம் நிகழவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சுமார் 12 முதல் 18 விழுக்காட்டினருக்கு குறை பிரசவமாகி விடுகிறது.

இயல்பான எடையான இரண்டரை கிலோவுக்கு குறைவான எடையுடன் குழந்தை பிறந்தால் அது எடை குறைந்த குழந்தை அல்லது குறை பிரசவக் குழந்தை எனப்படுகிறது.

ஏழு மாதத்திற்குப் பிறகு திடீரென எப்போதாவது சிறுநீர் கசிவது அல்லது பெருக்கெடுப்பது போன்றே பனிநீர் வெளியேறுவதைத் தொடர்ந்து பிறக்கும் குழந்தை குறைபிரசவக் குழந்தையாகும்.

ஒருமுறை கருத்தரித்து குறை பிரசவத்தில் குழந்தை பெற்றிருந்தால் மறு முறையும் அவ்வாறு நிகழ வாய்ப்பு இருக்கிறது.

குழந்தையைப் பார்த்ததும் இது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையா என்பதை சொல்ல வேண்டுமா?

குழந்தையின் தோல் சிவந்து, சதைப்பிடிப்பில்லாமல் மெலிந்தும், கைகால்கள் சிறுத்து தலை மட்டும் பெரியதாகவும் இருக்கும்.

ஆண் குழந்தையாக இருந்தால் விரைப்பை கருப்பாக மாறாமல் சிவப்பாக இருக்கும். பெண் குழந்தையின் யோனிச் சிறுஉதடுகள் பெரிதாக விரிந்து வீங்கியும், யோனிப் பெரு உதடுகள் ஒடுங்கியும் காணப்படும்.

குழந்தையின் உடம்பில் லானுகோ எனப்படும் பூனை மயிர்கள் அதிகமாக காணப்படும். குழந்தைக்கு உடல் அசைவுகள் எதுவும் இருக்காது.

நீளவாக்கில் 49 செ.மீ. இருக்க வேண்டிய குழந்தை 45 செ.மீ. அல்லது அதற்குக் ககுறைவாக இருக்கும். அதாவது வாரத்திற்கு இரண்டரை செ.மீ. குறைந்து காணப்படும்.

உதாரணமாக 34வது வாரத்தில் பிறந்த குழந்தை நாற்பத்தான்னரை செ.மீ. நீளம் மட்டுமே இருக்கும். இக்குழந்தை பாலை உறிஞ்சிக் குடிக்காது. விரைவில் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் குழந்தையின் தொடையில் முன் எலும்பு வளர்ந்திருக்காது.

குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தால் என்ன என்று சிலர் நினைக்கலாம். குறை பிரசவ குழந்தைக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து மரண விகிதம் அதிகரிக்கும்.

750 கிராம் எடைக்கும் கீழ் இருந்தால் நூறில் எட்டு குழந்தைதான் பிழைக்கும். இந்தக் குழந்தைகளில் அறுபது விழுக்காட்டினர் பிறந்த 48 மணி நேரத்திற்குள் இறந்துவிடுகிறார்கள்.

750 கிராம் முதல் ஒரு கிலோ வரையுள்ள குழந்தை பிழைக்க 30 விழுக்காடு வாய்ப்பு மட்டுமே உள்ளது.

ஒன்று முதல் ஒன்னரை கிலோ எடையுள்ள குழந்தை பிழைக்க 40 விழுக்காடு வாய்ப்பிருக்கிறது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பராமரிப்பது கடினமாகும். குழந்தையின் உடல் திறனும், அறிவுத் திறனும் சில வேளைகளில் பாதிக்கப்படலாம்.

அடுத்த பத்தாண்டுகளில் குழந்தை இறந்துபோக அதிக வாய்ப்பிருக்கிறது. மூளை வளர்ச்சியில்லாத நிலை, கண் பார்வை பாதிக்கப்படுவது போன்றவை இந்தக் குழந்தைகளுக்குத்தான் அதிகமாக வரும்.

No comments:

Post a Comment