Monday, 22 March 2010

ஏழை மாணவர்களுக்கு காலை டிபன் வடை, இட்லி


கோவை: தமிழகத்தில் இலவசத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காமராஜர் காலத்தில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டு எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெ., ஆகியோர் ஆட்சி காலத்தில் போஷாக்கான உணவுடன் கவர்ச்சியும் இணைந்த முட்டை கீரை என பல வடிவங்கள் பெற்றது. சத்துணவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கோடிக்கணக்கான மாணவ , மாணவிகள் மதிய உணவு உட்கொண்டு தங்களது படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.



இந்த தருணத்தில் புதுமையான திட்டத்தை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்றைய பட்ஜெட்டில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ. கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மேயர் வெங்கடாசலம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தாக்கலான பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியானதும் ஆளும் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.


கமிஷன் ஆய்வுக்கு பின்னர் முடிவு : கோவை மாநகராட்சி கல்விக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டு பின்னர் ஆய்வு நடத்த ஓரு குழு அமைக்க கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். இந்த ஆய்வு குழு படி தாக்கல் செய்த அறிக்கையில் ; கோவையில் ஏழை மாணவர்கள் தான் மாநகராட்சி பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் வறுமை காரணமாக காலை உணவு கிடைக்காத போது பள்ளிக்கு செல்ல வேண்டுமா என்று எண்ணத்தோன்றும். எனவே அவர்களுக்கு இந்த பிரச்னை இருக்கக்கூடாது என்றும் , இதற்கு காலை சிற்றுண்டி வழங்கினால் நலம் என தெரிவித்தது. இதன்படி மாணவ, மாணவிகளின் உடல் நலன் மற்றும் கல்வி அறிவை கருத்தில் கொண்டும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் மாநகராட்சி அதிகாரி ஒருவர்.


கோவை மாநகராட்சிக்குட்பட்ட 85 பள்ளிகளில் முதற்கட்டமாக ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த வகையான உணவுகள் வழங்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்வர். இந்த திட்டத்தில் 33 ஆயிரம் பேர் பயன்பெறுவர். இந்த காலை சிற்றுண்டி திட்டம் இந்தியாவிலேயே இல்லாத திட்டம் என்பதால் பிற மாநிலங்களிலும், தமிழகத்தில் பிற மாநகராட்சிகளும் இந்த புதிய திட்டத்தை பின் பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment