Tuesday, 23 March 2010
கருப்பு இனத்தின் ஹீரோ
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, பிறப்பு: ஜூலை 18, 1918), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை) தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், (இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. 1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது. மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர்
பதவியில்
10 மே 1994 – 14 ஜூன் 1999
முன்னவர் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க்
பின்வந்தவர் தாபோ உம்பெக்கி
--------------------------------------------------------------------------------
அணி சேரா இயக்கப் பொதுச் செயலாளர்
பதவியில்
3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999
முன்னவர் அண்டிரெஸ் பாஸ்திரானா அராங்கோ
பின்வந்தவர் தாபோ உம்பெக்கி
அரசியல் கட்சி ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ்
--------------------------------------------------------------------------------
பிறப்பு ஜூலை 18 1918 (வயது 91)
முவெசோ, தென்னாப்பிரிக்கா
வாழ்க்கைத்
துணை எவெலின் மாசே (1944–1957)
வின்னி மண்டேலா (1957–1996)
கிராசா மாச்செல் (1998–இன்று)
இருப்பிடம் ஹூஸ்டன் எஸ்டேட், தென்னாப்பிரிக்கா
சமயம் மெதடிசம்
கையொப்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment