Saturday, 10 April 2010

வீடு கட்டும் முறை

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை என்ன?




வாஸ்து அறிவியல் பூர்வமானது. சூரிய‌க் கதிர், காற்று ஆகியவை வீட்டிற்குள் நுழையக் கூடிய தன்மை, ஆற்றல் ஆகியவற்றை நெறிப்படுத்துதலே வாஸ்து சாஸ்திரத்தின் குறிக்கோள்.

இயற்கையின் அபரிமிதமான ஆற்றலை, சக்தியை மனித வளர்ச்சிக்கு‌ம், ஆரோக்கியத்திற்கு‌ம் முறை‌ப்படு‌த்‌தி‌ப் பயன்படுத்துவதே வாஸ்து.

நவக்கிரகம் என்று அழை‌ப்பது போல நாம் வாழும் வீட்டையும் கிரகம் என்று கூறுவார்கள். அதனா‌ல்தா‌ன் புதுமனை‌யி‌ல் குடியேறுவதையு‌ம் கிரகப்பிரவேசம் என்கிறோம்.

எங்கு சென்று வ‌ந்தாலும் ஓய்வெடுப்பதும், வாழ்வதும் வீட்டில்தான். எனவே வீட்டில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் கதிர் வீச்சுக்க‌‌ள் நம்மை தாக்காமல் அவற்றை நம் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் கலையே வாஸ்து சாஸ்திரக் கலையாகும். இது ஆயக் கலைகள் 64ல் ஒன்றான ஜோதிடக் கலையில் ஒரு பிரிவாகும்.

நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகும். அதனை வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைத்து பயன்படுத்தினோம் என்றால் ஆக்கப்பூர்வமான பலன்கள் உண்டாகும். தென்கிழக்கு மூலையில் சமையல் அறை அமை‌த்து, கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சமைத்தால் அந்த உணவு அதிக சுவை தரும். வீணாகாது. எளிதில் கெடாது. சமைத்துக் கொண்டிருக்கும்போதே ஸ்டவ் வெடிப்பது, வெந்நீர் காலில் கொட்டிக் கொள்வது போன்ற அசம்பாவிதங்களு‌ம் ஏ‌ற்படாது.

ஜோதிட சாஸ்திரத்தில் தென் கிழக்கு மூலைக்கான கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சுப‌த் தன்மை பெறாமல், பாவ கிரக சேர்க்கை‌யி‌ல் அ‌ல்லது வீச்சில் அமைந்திருக்குமானால் அவர்களுக்கு சமையலறை அமையும் திசை மாறுபடும்.

அது அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பை வைத்து முடிவு செய்ய வேண்டும். எனவே வாஸ்துவை அவரவர்களின் ஜாதகத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தும்போதுதா‌ன் முழு‌ப் பலனை அடைய முடியும்.

சமையலறை‌க்கு கூ‌றியைத‌ப் போல ஒ‌வ்வொரு ‌விடய‌த்‌திலு‌ம் ஒருவருடைய மனை‌‌க்கார‌ரி‌ன் ஜாதக‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌‌யிலேயே வா‌ஸ்து சா‌ஸ்‌திர‌த்தை கையாள வே‌ண்டு‌ம். அது மு‌க்‌கியமானது.,.,.,.,.,.,.,.,.,.,.,.,..,.,.,.,..,.,..,.,.,


வீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்?


வீட்டில் குறிப்பிட்ட திசையில் காலியிடம் இருக்கக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள்? ஆனால் வேறு சிலர் குறிப்பிட்ட திசையில் இடம் காலியாக இருந்தால்தான் வீடு சுபிட்சமாக இருக்கும் என்று அறிவுறுத்துகின்றனர்? வீட்டில் காலியிடம் இருக்கலாமா? இருக்கக் கூடாதா?

பதில்: பொதுவாக வடகிழக்கு எனப்படும் ஈசானிய மூலையில் காலியிடம் இருக்கலாம். அதில் தவறில்லை. அதற்கடுத்தபடியாக, வடமேற்கு திசையை ஓரளவு காலியாக வைக்கலாம். ஆனால் முழுமையாக காலியாக விடக்கூடாது.

தென் திசை எப்போதுமே அதிக சுமைகளுடன் முழுமையாக இருப்பது நல்லது. ஆனால் வடக்கு திசையையும் ஓரளவு காலியாக இருக்கலாம். வடமேற்கு அறையில் வடகிழக்கு பகுதியை காலியாக வைத்துக் கொள்வதும் நல்ல பலனை அளிக்கும்




வாஸ்து சாஸ்திரத்திப்படி ஜன்னல்களுக்கான முக்கியத்துவம் குறித்துக் கூறுங்கள்?


வீட்டின் வடக்குப் பகுதியில் ஜன்னல்கள் வைப்பது அவசியம். வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகள் ஜன்னல் வைக்க ஏற்றவை. குறிப்பாக, ஈசானிய மூலையில் ஜன்னல் வைத்தாக வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அப்போதுதான் அந்த வீடு விருத்தி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் பிராண வாயு அதிகமாகக் கிடைக்கிறது. எனவே வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைத்தால் அதன் காரணமாக வீட்டில் பிராண வாயுவின் விகிதம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கியமாக இருப்பர்.

இதன் காரணமாகவே பூஜை அறை, பெரியவர்கள் தங்கும் அறை உள்ளிட்டவற்றை ஈசானிய மூலையில் பழங்காலத்தில் அமைத்தனர்.

சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் இருப்பதும் உண்டு. அதற்கு அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு.

தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருப்பது நல்லது. காரணம் தென்மேற்கு திசையை குபேர மூலை (நைருதி) என்று வாஸ்து கூறுகிறது. அங்கு திறப்புகள் (ஜன்னல்கள்) இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

கேள்வி: ஒரு வீட்டில் வைக்கப்படும் ஜன்னல்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்க வேண்டும்?

பொதுவாக ஜன்னல்களுக்கு என்று எண்ணிக்கை எதையும் வாஸ்து சாஸ்திரம் தனியாக வகுக்கவில்லை. பழங்காலத்தில் எந்த விடயத்திலும் ஒற்றைப்படையை பயன்படுத்தியதால் வீடுகளில் வைக்கப்படும் ஜன்னல்களின் எண்ணிக்கைக்கும் அதனையே மக்கள் பின்பற்றினர். எனவே எண்ணிக்கையைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,,.,.,.,,...,.,.






வீட்டு வாயில் கதவுக்கு அருகிலேயே பூஜை அறையை வைக்கலாமா?


பொதுவாகவே வீட்டின் வாயில் கதவைத் திறக்கும் போது மெல்லிய அதிர்வு உருவாகும். இது மனிதர்களால் உணர முடியாத அளவு இருக்கும். ஆனால் சுவாமி படங்களை வைக்கும் இடம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த இடம் அதிர்வுகள் ஏற்படாதவாறு இருத்தல் அவசியம்.

எனவேதான் தலைவாசலுக்கு அருகே பூஜையறை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்தினர். இதேபோல் தலைவாசல் வழியாகவே அனைத்து தரப்பினரும் வந்து செல்வார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் நல்மனது படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் சென்று வரும் இடம் (இறுதிச் சடங்கு) சிறப்பானதாக இருக்காது.

இதேபோல் அக்கம்பக்கத்தில் இருந்து வீட்டு விலக்கு பெற்ற பெண்களும் தலைவாசல் வழியாகவே வீட்டில் நுழைய நேரிடும். எனவேதான், பூஜையறையை தலைவாசலுக்கு அருகே வைக்கக் கூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்தினர்.

பழங்காலத்தில் ஈசானியம் அல்லது வடமேற்கு பகுதியில் பூஜையறை அமைத்தனர். அந்த திசையில் பூஜையறை அமைப்பது வாஸ்துப்படி நல்லது

No comments:

Post a Comment