பிள்ளைப் பேறுக்கும், பிரசவத்திற்குப் பின்பும்
25 பிப்ரவரி 2010( 11:44 IST )
கருநொச்சி சாறு, கரிசாலை சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சிற்றாமணக்கு எண்ணெய், பசு நெய் போன்றவற்றை வகைக்கு 100 மில்லியும், நெருஞ்சில் விதை, மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை வகைக்கு 6 கிராமுக்கு எடுத்து இடித்து கலந்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
இதை, மாதவிலக்கான 3 நாட்கள் 16 மில்லி அளவு குடித்து வர மலட்டுத் தன்மை நீங்க கர்ப்பம் உண்டாகும்.
அதேப்போல பிரசவத்திற்குப் பிறகும் பிள்ளைப் பெற்ற பெண்களுக்கு உடல் வலி அதிகமாக இருக்கும்.
உடல் வலி தீருவதற்கு நொச்சி இலையை நீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்து வர உடல் வலி குணமாகும்.
இதேப் போன்ற முறையை பிள்ளைப் பெற்ற பெண்களுக்கும் செய்து குளிப்பாட்டி விட்டால் உடல் வலி தீரும்.
குழந்தைகள் உள்ள வீடுகளில் கொசுவை ஒழிக்க நொச்சி இலை கொண்டு தீமூட்டி புகைப் போட்டு விடுவது ஒவ்வாமைகளைத் தவிர்க்க உதவும்.
No comments:
Post a Comment