Wednesday, 14 April 2010

மக்கள் பிரதிநிதிகளின் சொத்து எவ்வளவு தெரியுமா?


மக்கள் பிரதிநிதிகளின் சொத்து எவ்வளவு தெரியுமா?
ஏப்ரல் 14,2010,00:00 IST

புதுடில்லி:ராஜ்ய சபாவில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் அதிகம் பேர் கோடீஸ் வரர்களாக உள்ளனர்.தேர்தல் நேரத்தில் மனு தாக்கல் செய்யும் போது, வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடுவது வழக்கம். இதனால், லோக்சபா எம்.பி.,க்களின் சொத்து விவரங் களை அறிய முடிகிறது.ஆனால், ராஜ்ய சபா எம்.பி.,க் களின் சொத்து விவரங்கள் தெரிய வருவதில்லை. சமீபத்தில் தன் னார்வ நிறுவனம் ஒன்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ராஜ்யசபா எம்.பி.,க்களின் சொத்து விவரங்களை கேட்டு பெற்றுள்ளது.



ராஜ்ய சபா எம்.பி.,க்களின் 183 பேரின் சொத்து விவரங்கள் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.ராஜ்ய சபா எம்.பி.,க்களில் மிகப்பெரிய பணக்காரர் ராகுல் பஜாஜ். இவரது சொத்து மதிப்பு 308 கோடி ரூபாய். இதில், சொத்தே இல்லை என 12 எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜாவும் ஒருவர்.காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்ய சபாவில் 51 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் 33 பேர் கோடீஸ்வரர்கள். பாரதிய ஜனதா கட்சிக்கு 40 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் 21 பேர் கோடீஸ்வரர்கள்.சமாஜ்வாடி கட்சிக்கு 12 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் ஏழு பேர் கோடீஸ்வரர்கள்.



பகுஜன் சமாஜ் கட்சிக்கு எட்டு எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் நான்கு பேர் குபேரர்கள்.அ.தி.மு.,க.,வுக்கு ஏழு பேர் உள்ளனர். இவர்களில் மூவர் கோடீஸ்வரர்கள். ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஐந்து பேர் உள்ளனர். இவர்களில் மூன்று பேர் கோடீஸ்வரர்கள்.ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சுசிலா திரியா என்பவர் தான் அக்கட்சியின் ஏழை எம்.பி.,யாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 16 லட்சம் ரூபாய். இதே கட்சியைச் சேர்ந்த குஜராத் எம்.பி., பிரவீன் ராஷ்டிரபாலுக்கு 20 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சொத்து உள்ளது.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பணக்கார எம்.பி., ஆந்திராவை சேர்ந்த சையத் அஜீஸ் பாஷா. இவரது சொத்து மதிப்பு 19 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புரட்சிகர சோஷலிச கட்சி எம்.பி., அபானி ராயின் சொத்து மதிப்பு 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப் பினர் பிருந்தா கராத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்.ராஜ்ய சபாவின் நான்காவது பெரிய பணக்காரர் ஜெயா பச்சன். இவரது சொத்து மதிப்பு 215.5 கோடி ரூபாய்.



சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேறிய அமர் சிங்கின் சொத்து மதிப்பு 79.5 கோடி.சென்னையில் உள்ள சத்யம் தியேட்டர் உரிமையாளர் சுப்பிராமி ரெட்டியின் சொத்து மதிப்பு 272 கோடியே 64 லட்சம் ரூபாய். தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் சொத்து மதிப்பு 278 கோடியே 64 லட்சம் ரூபாய்.

No comments:

Post a Comment